< Back
டென்னிஸ்
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்; அரையிறுதியில் ஜெசிகா பெகுலா அதிர்ச்சி தோல்வி

Image Courtesy: AFP

டென்னிஸ்

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்; அரையிறுதியில் ஜெசிகா பெகுலா அதிர்ச்சி தோல்வி

தினத்தந்தி
|
7 April 2024 6:33 AM IST

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

வாஷிங்டன்,

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா ரஷியாவின் டாரியா கசட்கினாவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என இழந்த ஜெசிகா பெகுலா 2வது செட்டை 6-4 என கைப்பறினார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசில் செட்டில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பெகுலா 6-7(5-7) என்ற புள்ளிக்கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

இறுதியில் 4-6, 6-4, 6-7(5-7) என்ற புள்ளிக்கணக்கில் ரஷியாவின் டாரியா கசட்கினாவிடம் தோல்வி கண்டு முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா தொடரில் இருந்து வெளியேறினார்.

மேலும் செய்திகள்