< Back
டென்னிஸ்
டென்னிஸ்
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்; மரியா சக்காரியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் டேனியல் காலின்ஸ்
|7 April 2024 10:27 AM IST
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
வாஷிங்டன்,
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கிரேக்க டென்னிஸ் வீராங்கனை மரியா சக்காரி, அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய டேனியல் காலின்ஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மரியா சக்காரிக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் டேனியல் காலின்ஸ் ரஷியாவை சேர்ந்த டாரியா கசட்கினா உடன் மோத உள்ளார்.