< Back
டென்னிஸ்
டென்னிஸ்
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் அசரென்கா அதிர்ச்சி தோல்வி
|6 April 2024 9:52 AM IST
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
வாஷிங்டன்,
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான பெலாரசை சேர்ந்த விக்டோரியா அசரென்கா அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த அசரென்கா அடுத்த செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற 3வது செட்டில் அபாரமாக செயல்பட்ட ஜெசிகா பெகுலா 7-6(9-7) என்ற புள்ளிக்கணக்கில் அசரென்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.