< Back
டென்னிஸ்
சேலஞ்சர் டென்னிஸ் தொடர்: இந்திய வீரர் சுமித் நாகல் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

Image : AFP 

டென்னிஸ்

சேலஞ்சர் டென்னிஸ் தொடர்: இந்திய வீரர் சுமித் நாகல் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
16 Jun 2024 4:53 PM IST

இந்திய வீரர் சுமித் நாகல், ஸ்பெயின் வீரர் மிராலிஸ் உடன் மோதினார்.

ரோம்,

இத்தாலியில் நடக்கும் பெருகியா சேலஞ்சர் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது.இதில் இந்திய வீரர் சுமித் நாகல், ஸ்பெயின் வீரர் மிராலிஸ் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் சிறப்பாக விளையாடி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தினார். இதனால் சுமித் நாகல் 7-6 (7-2), 1-6, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் லூசியானோ டார்டெரியுடன் சுமித் நாகல் மோத உள்ளார்.

மேலும் செய்திகள்