< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்கராஸ்- மெத்வதேவ் வெளியேற்றம்
|2 Nov 2022 11:50 PM IST
உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
பாரிஸ்,
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் தகுதி சுற்று போட்டிகள் பாரிஸில் கடந்த 29-ஆம் தேதி தொடங்கியது. 2 நாட்கள் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் ரவுண்டு ஆப் 62 சுற்று போட்டிகள் தொடங்கியது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற ரவுண்டு ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜப்பானின் யோஷிஹிட்டோ நிஷியோகாவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
அதே நேரத்தில் மற்றொரு ரவுண்டு ஆப் 32 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினௌர், 6-4, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் உலகின் முன்னாள் முதல் நிலை வீரரான மெட்வெடேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.