< Back
டென்னிஸ்
டென்னிஸ்
கனடா ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நட்சத்திர வீரர் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி
|10 Aug 2022 9:16 PM IST
மூன்று முறை சாம்பியனான முர்ரே அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ்யிடம் வீழ்ந்தார்.
ஒட்டாவா,
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடருக்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் தகுதி சுற்று போட்டிகள் கடந்த 6 ஆம் தேதி தொடங்கிய நிலையில் முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கியது.
இந்த நிலையில் இன்று நடந்த முதல் சுற்று போட்டி ஒன்றில் இங்கிலாந்து நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வியடைந்தார். கனடா ஓபன் போட்டிகளில் மூன்று முறை சாம்பியனான முர்ரே 6-1 6-3 என்ற கணக்கில் அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ்யிடம் வீழ்ந்தார். முதல் சுற்றில் தோல்வி அடைந்துள்ளதால் ஒற்றையர் பிரிவில் இருந்து அவர் வெளியேறியுள்ளார்.