< Back
டென்னிஸ்
கனடா ஓபன் டென்னிஸ் போட்டி - கால் இறுதி சுற்றுக்கு போலந்து வீரர் முன்னேற்றம்
டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ் போட்டி - கால் இறுதி சுற்றுக்கு போலந்து வீரர் முன்னேற்றம்

தினத்தந்தி
|
12 Aug 2022 5:04 PM IST

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3-ம் சுற்று ஆட்டத்தில் போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காஸ் வெற்றி பெற்றார்.

ஒட்டாவா,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3-ம் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ஆல்பர்ட் ரமோஸ் உடன், போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காஸ் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-7, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் ஹர்காஸ் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் செய்திகள்