< Back
டென்னிஸ்
கனடா ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
13 Aug 2023 2:35 AM IST

கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

டொராண்டோ,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொராண்டோ, மான்ட்ரியல் நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-3, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டேனிலி காலின்சை விரட்டியடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா 6-2, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை கோகோ காப்பையும், ரஷிய வீராங்கனை சாம்சோனோவா 6-4, 6-4 என்ற நேர்செட்டில் பெலின்டா பென்சிச்சையும் (சுவிட்சர்லாந்து), கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா 5-7, 7-5, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் டாரியா கசட்கினாவையும் (ரஷியா) தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.

மேலும் செய்திகள்