< Back
டென்னிஸ்
டென்னிஸ்
கனடா ஓபன் டென்னிஸ்: சானியா- மேடிசன் இணை அரையிறுதியில் தோல்வி..!
|14 Aug 2022 6:35 AM IST
கனடா ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா- மேடிசன் இணை அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
ஒட்டாவா,
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த போட்டியில் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா இரட்டையர் பிரிவில் அமெரிக்கவின் மேடிசன் கீஸுடன் இணைந்து விளையாடி வருகிறார். இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் சானியா - மேடிசன் இணை, அமெரிக்காவின் கோகோ - பெகுலா இணையுடன் மோதியது.
இந்த போட்டியில் சானியா- மேடிசன் இணை 5-7, 5-7 என்ற செட் கணக்கில் கோகோ - பெகுலா இணையிடம் தோல்வியைத் தழுவியது. பெண்கள் இரட்டையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனைகள் கோகோ, பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.