< Back
டென்னிஸ்
கனடா ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் ரஷிய வீரர் மெட்விடேவ் தோல்வி
டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் ரஷிய வீரர் மெட்விடேவ் தோல்வி

தினத்தந்தி
|
13 Aug 2023 2:54 AM IST

கால்இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினார், மெட்விடேவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

டொராண்டோ,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொராண்டோ, மான்ட்ரியல் நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டத்தில், தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினார் 7-6 (9-7), 7-5 என்ற நேர்செட்டில் முன்னாள் சாம்பியனும், 3-வது இடத்தில் உள்ளவருமான டேனில் மெட்விடேவை (ரஷியா) வீழ்த்தி முதல்முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

மற்ற ஆட்டங்களில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னெர் 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் மான்பில்சையும் (பிரான்ஸ்), ஸ்பெயின் வீரர் டேவிடோவிச் போகினா 6-4, 6-2 என்ற நேர்செட்டில் மெக்கன்சி மெக்டொனால்டையும் (அமெரிக்கா) தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தனர்.

மேலும் செய்திகள்