< Back
டென்னிஸ்
கனடா ஓபன் டென்னிஸ்: அரைஇறுதி சுற்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னெர் வெற்றி

Image Courtesy : AFP

டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: அரைஇறுதி சுற்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னெர் வெற்றி

தினத்தந்தி
|
14 Aug 2023 4:49 AM IST

ஜானிக் சின்னெர் 6-4, 6-4 என்ற நேர்செட்டில் டாமி பாலை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

டொராண்டோ,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னில் போட்டி அங்குள்ள டொராண்டோ, மான்ட்ரியல் நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இத்தாலி வீரர் ஜானிக் சின்னெர், 14-ம் நிலை வீரரான டாமி பாலை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.

1 மணி 56 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஜானிக் சின்னெர் 6-4, 6-4 என்ற நேர்செட்டில் டாமி பாலை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தோல்வி கண்ட டாமி பால் கால்இறுதியில் 'நம்பர் ஒன்' வீரரான கார்லஸ் அல்காரசுக்கு (ஸ்பெயின்) அதிர்ச்சி அளித்து இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

வெற்றிக்கு பிறகு ஜானிக் சின்னெர் கூறுகையில், 'ஆட்டத்தில் எல்லா சூழ்நிலைகளிலும் நான் ஆடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. டாமி பால் அபாரமாக ஆடினார். இறுதிப்போட்டியிலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்' என்றார்.

மேலும் செய்திகள்