< Back
டென்னிஸ்
கனடா ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு தகுதி பெற்றார் ஹூபர்ட் ஹர்காக்ஸ்

Image Courtesy: AFP 

டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு தகுதி பெற்றார் ஹூபர்ட் ஹர்காக்ஸ்

தினத்தந்தி
|
13 Aug 2022 12:17 AM IST

காலிறுதி போட்டியில் நிக் கிர்கியோஸ் - ஹூபர்ட் ஹர்காக்ஸ் ஆகியோர் மோதினர்.

ஒட்டாவா,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் முன்னணி டென்னிஸ் வீரர் நிக் கிர்கியோஸ் சக ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினாரை 6-2 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார்.

இந்த நிலையில் காலிறுதி போட்டியில் அவர் போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காக்ஸை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஹூபர்ட் ஹர்காக்ஸ் 7-6, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்