< Back
டென்னிஸ்
டென்னிஸ்
கனடா ஓபன் டென்னிஸ்: டேன் இவான்ஸ், கரேனோ அரையிறுதிக்கு தகுதி..!
|14 Aug 2022 6:01 AM IST
நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் டேன் இவான்ஸ் அமெரிக்க வீரர் டாமி பாலுடன் மோதினார்.
டொரண்டோ,
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீரர் பாப்லோ கரேனோ புஸ்டா இங்கிலாந்து வீரர் ஜேக் டிராப்பருடன் மோதினார். இந்த போட்டியில் கரேனோ 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் ஜேக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி போட்டியில் இங்கிலாந்து வீரர் டேன் இவான்ஸ் அமெரிக்க வீரர் டாமி பாலுடன் மோதினார். இந்த போட்டியில் இவான்ஸ் 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.