கனடா ஓபன் டென்னிஸ்; காஸ்பர் ரூட் வெற்றி
|இந்த வெற்றியின் மூலம் காஸ்பர் ரூட் 3-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
மாண்ட்ரியல்,
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி முடிவடைய உள்ளது. இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டியில் டென்னிஸ் தரவரிசையில் 5ஆம் நிலை வீரரான நார்வேவை சேர்ந்த காஸ்பர் ரூட் செக் நாட்டின் ஜிரி லெஹக்கா உடன் மோதினார்.
போட்டி தொடங்கிய முதலே ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. முதல் செட்டில் காஸ்பர் ரூட் ஏராளமான தவறுகள் இழைத்தார். இதனால் முதல் செட் டைபிரேக்கர் வரை சென்றது. இருப்பினும் முதல் செட்டை கைப்பற்றினார். இதனால் அவர் 2-வது செட்டில் சுதாரித்து விளையாடினார். அதன் மூலம் 2-வது செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த போட்டியில் ரூட் 7-6 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். அவர் 3-வது சுற்றில் டேவிடோவிச் போகினா உடன் விளையாட உள்ளார்.