< Back
டென்னிஸ்
டென்னிஸ்
கனடா ஓபன் டென்னிஸ் - ஆஸ்திரேலியாவின் டி மினார் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
|13 Aug 2023 11:09 PM IST
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது.
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், ஸ்பெயின் வீரர் போகினாவுடன் மோதினார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய மினார் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல்,மற்றொரு அரையிறுதி போட்டியில் , இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்க வீரர் டாமி பாலுடன் மோதினார். இதில் சின்னர் 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.