< Back
டென்னிஸ்
பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர்; டொமினிக் திம்மை வீழ்த்தி ரபேல் நடால் வெற்றி..!

Image Courtesy: @BrisbaneTennis

டென்னிஸ்

பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர்; டொமினிக் திம்மை வீழ்த்தி ரபேல் நடால் வெற்றி..!

தினத்தந்தி
|
3 Jan 2024 2:46 AM IST

பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

பிரிஸ்பேன்,

பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று (ரவுண்ட் ஆப் 32) ஆட்டத்தில் ஸ்பெயினை சேர்ந்த முன்னாள் 'நம்பர் ஒன்' வீரர் ரபெல் நடால் ஆஸ்திரியாவின் டொமினிக் திம்மை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் டொமினிக் திம்மை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார். ரபேல் நடால் ரவுண்ட் ஆப் -16 ஆட்டத்தில் வரும் 4ம் தேதி ஆஸ்திரேலியாவின் ஜேசன் குப்லரை எதிர்கொள்கிறார்.

மேலும் செய்திகள்