< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர்; ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் டிமிட்ரோவ்...!
|7 Jan 2024 3:43 PM IST
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹோல்கர் ரூன் - கிரிகோர் டிமிட்ரோவ் மோதினர்.
பிரிஸ்பேன்,
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் கடைசி ஆட்டமாக இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவ், டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூன் உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிரிகோர் டிமிட்ரோவ் 7-6(7-5), 6-4 என்ற செட் கணக்கில் ஹோல்கர் ரூனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.