< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பிரிஸ்பேன் டென்னிஸ்; பெண்கள் ஒற்றையர் பிரிவில் எலெனா ரைபாகினா சாம்பியன்..!
|7 Jan 2024 1:39 PM IST
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரைபாகினா மற்றும் அரினா சபலென்கா மோதினர்.
பிரிஸ்பேன்,
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, 4-வது இடத்தில் உள்ள கஜகஸ்தானை சேர்ந்த ரைபாகினா உடன் மோதினார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரைபாகினா 6-0 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.