< Back
டென்னிஸ்
கனடா ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் பீட்ரிஸ் ஹடாத் மியா

Image Courtesy: AFP

டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் பீட்ரிஸ் ஹடாத் மியா

தினத்தந்தி
|
14 Aug 2022 8:27 PM IST

கரோலினா ப்ளிஸ்கோவாவை வீழ்த்தி ஹடாத் மியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

டொரண்டோ,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப் 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதை தொடர்ந்து நடைபெற்ற 2-வது அரையிறுதியில் பிரேசில் நாட்டை சேர்ந்த பீட்ரிஸ் ஹடாத் மியா செக் வீராங்கனை கரோலினா ப்ளிஸ்கோவாவை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் பீட்ரிஸ் ஹடாத் மியா 6-4, 7-6 (9/7) என்ற கணக்கில் கரோலினா ப்ளிஸ்கோவாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இறுதி போட்டியில் அவர் சிமோனா ஹாலெப் எதிர்கொள்கிறார்.

மேலும் செய்திகள்