< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பெர்லின் ஓபன் டென்னிஸ்: காயத்தால் விலகிய சபலென்கா...அரையிறுதிக்கு முன்னேறிய காலின்ஸ்கயா
|22 Jun 2024 6:34 PM IST
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
பெர்லின்,
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் அன்னா காலின்ஸ்கயா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் சபலென்கா 1-5 என்ற புள்ளிக்கணக்கில் பின்னடைவில் இருந்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக சபலென்கா போட்டியில் இருந்து விலகினார். இதனால் ரஷியாவின் அன்னா காலின்ஸ்கயா அரையிறுதிக்கு முன்னேறினார்.