< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பெர்லின் ஓபன் டென்னிஸ்: ரைபகினா காயம்... அரையிறுதிக்கு முன்னேறிய அசரென்கா
|21 Jun 2024 7:29 PM IST
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
பெர்லின்,
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பெலாரசின் விக்டோரியா அசரென்கா, கஜகஸ்தானின் எலினா ரைபகினா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் 3-1 என்ற புள்ளிக்கணக்கில் விக்டோரியா அசரென்கா முன்னிலையில் இருந்தார். அப்போது எலினா ரைபகினாவுக்கு திடீரென உடல்நலக்குறைபாடு ஏற்பட்டதால் அவர் போட்டியில் இருந்து விலகினார். இதன் காரணமான அசரென்கா அரையிறுதிக்கு முன்னேறினார்.