< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பெர்லின் ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா சாம்பியன்
|23 Jun 2024 9:05 PM IST
பெர்லின் ஓபன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெசிகா பெகுலா சாம்பியன் பட்டம் வென்றார்.
பெர்லின்,
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்றது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயா, அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜெசிகா பெகுலா 6-7 (0-7), 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் காலின்ஸ்கயாவை வீழ்த்தி பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். ஜெசிகா பெகுலா பெறும் 5-வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.