< Back
டென்னிஸ்
பெர்லின் ஓபன் டென்னிஸ்; அசரென்கா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

Image Courtesy: AFP

டென்னிஸ்

பெர்லின் ஓபன் டென்னிஸ்; அசரென்கா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
19 Jun 2024 8:53 AM IST

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.

பெர்லின்,

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று (ரவுண்ட் ஆப் 32) ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் விக்டோரியா அசரென்கா, கிரேக்க வீராங்கனையான மரியா சக்காரியை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அசரென்கா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் மரியா சக்காரியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார். இன்று நடைபெறும் 2வது சுற்று ஆட்டத்தில் அசரென்கா துருக்கியின் ஸெய்னெப் சொன்மெஸ் உடன் மோத உள்ளார்.

மேலும் செய்திகள்