< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் - சிட்சிபாஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
|22 April 2023 10:20 PM IST
இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டியுடன் மோதினார்.
பார்சிலோனா,
ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டியுடன் மோதினார்.
இதில் முதல் செட்டை சிட்சிபாஸ் 6-4 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை நீண்ட போராட்டத்துக்கு பின் முசெட்டி 7-5 என கைப்பற்றினார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை சிட்சிபாஸ் 6-3 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நாளை இரவு இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.