< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி
|17 April 2024 6:52 PM IST
ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமாவுடன் மோதினார்.
பார்சிலோனா,
பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமாவுடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ரூப்லெவ் 4-6, 6-7 (6-8) என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். பிரண்டன் நகஷிமா 2வது சுற்றுக்கு முன்னேறினார்