< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: நடால் வெற்றி
|17 April 2024 6:49 AM IST
பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.
பார்சிலோனா,
பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரரும், 12 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்), பிளவியா கோபாலியை (இத்தாலி) எதிர்கொண்டார்.
1 மணி 25 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் நடால் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கோபாலியை சாய்த்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். காயத்தால் 3 மாதத்திற்கு பிறகு களம் திரும்பிய 37 வயதான நடால் வெற்றியோடு தொடங்கி இருக்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) 4-6, 6-7 (6-8) என்ற நேர் செட்டில் 87-வது நிலை வீரரான பிரன்டன் நகாஷிமாவிடம் (அமெரிக்கா) 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.