< Back
டென்னிஸ்
பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: ஒற்றையர் பிரிவில் கேஸ்பர் ரூட் சாம்பியன்

image courtesy: Barcelona Open Banc Sabadell twitter

டென்னிஸ்

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: ஒற்றையர் பிரிவில் கேஸ்பர் ரூட் 'சாம்பியன்'

தினத்தந்தி
|
22 April 2024 4:29 AM IST

நேற்று நடந்த இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், 6-ம் நிலை வீரர் நார்வேயின் கேஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார்.

பார்சிலோனா,

களிமண் தரை போட்டியான பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், 6-ம் நிலை வீரர் நார்வேயின் கேஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கேஸ்பர் ரூட் 7-5, 6-3 என்ற நேர் செட்டில் சிட்சிபாசை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார்.

இதன் மூலம் கடந்த வாரம் நடந்த மான்டிகார்லோ டென்னிஸ் இறுதி சுற்றில் சிட்சிபாசிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டார். மகுடம் சூடிய ரூட்டுக்கு ரூ.4 கோடியும், 2-வது இடம்பிடித்த சிட்சிபாசுக்கு ரூ.2¼ கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்