< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் கால்இறுதிக்கு முன்னேற்றம்
|19 April 2024 4:44 AM IST
பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
பார்சிலோனா,
களிமண் தரை போட்டியான பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நார்வேயின் கேஸ்பர் ருட் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜோர்டான் தாம்சனை (ஆஸ்திரேலியா) எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
இந்த ஆட்டம் 1 மணி 12 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு ஆட்டத்தில் தாமஸ் மார்ட்டின் எட்செவிரி (அர்ஜென்டினா) சரிவில் இருந்து மீண்டு வந்து 3-6, 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் பிரன்டன் நகாஷிமாவை (அமெரிக்கா) சாய்த்தார்.