< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற எலிஸ் மெர்டென்ஸ் இணை
|28 Jan 2024 12:40 PM IST
ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
மெல்போர்ன்,
ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, இன்றுடன் முடிவடையவுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் தைவானின் ஹ்சியே சூ வெய் - பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் இணை லியுட்மிலா கிச்செனோக் - ஜெசினா ஒஸ்டாபென்கோ இணையை எதிர்கொண்டது.
இதில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹ்சியே சூ வெய் - எலிஸ் மெர்டென்ஸ் இணை 6-1, 7-5 என்ற செட் கணக்கில் லியுட்மிலா கிச்செனோக் - ஜெசினா ஒஸ்டாபென்கோ இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.