< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - பிரான்ஸ் வீரர் பெஞ்சமின்னை வீழ்த்தி டி-மினார் வெற்றி
|22 Jan 2023 5:15 PM IST
பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் பொன்ஸி உடன் மோதிய டி-மினார், 7- 6, 6 - 2, 6 - 1 என்ற செட் கணக்கில் சுலபமாக வெற்றி கண்டார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்றுக்கு உள்ளூர் வீரர் அலெக்ஸ் டி-மினார் முன்னேறி உள்ளார். ஒற்றையர் பிரிவு 3ம் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் பொன்ஸி உடன் மோதிய டி-மினார், 7- 6, 6 - 2, 6 - 1 என்ற செட் கணக்கில் சுலபமாக வெற்றி கண்டார்.
இந்த வெற்றி மூலம் நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்ற டி-மினார், நாளை நடைபெறும் நான்காம் சுற்றுப் போட்டியில் முன்னாள் சாம்பியன் ஜோகோவிச்சுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.