ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரை இறுதிக்குள் நுழைந்த சானியா-போபண்ணா ஜோடி
|கால் இறுதியில் விளையாட இருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியது.
சிட்னி,
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டை பிரிவில் முன்னனி வீராங்கனை சானியா மிர்ஸாவும், ரோகன் போபண்ணாவும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் அரியெல் பெஹர்(உருகுவே)-மகோட்டோ நினொமியா(ஜப்பான்) ஜோடியுடன் மோதிய சானியா-ரோகன் போபண்ணா ஜோடி 6-4, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்குள் நுழைந்தது.
இந்நிலையில் கால் இறுதியில் விளையாட இருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியதால் சானியா மிர்ஸா-ரோகன் போபண்ணா அரை இறுதிக்குள் நுழைந்துள்ளனர். இந்த தகவலை ரோகன் போபண்ணா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Lets just say we're moving on @MirzaSania #AustralianOpen pic.twitter.com/NIfu9PNKN0
— Rohan Bopanna (@rohanbopanna) January 24, 2023 ">Also Read: