< Back
டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா- அன்னா டேனிலினா ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா- அன்னா டேனிலினா ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
20 Jan 2023 5:56 AM IST

சானியா ஜோடி அடுத்து அன்ஹெலினா கலினினா (உக்ரைன்)- அலிசன் வான் உட்வானிக் (பெல்ஜியம்) இணையை எதிர்த்து விளையாட உள்ளது.

மெல்போர்ன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா- அன்னா டேனிலினா (கஜகஸ்தான்) ஜோடி 6-2, 7-5 என்ற நேர் செட்டில் டால்மா கால்பி (ஹங்கேரி)- பெர்னடா பெரா (அமெரிக்கா) இணையை வீழ்த்தியது.

36 வயதான சானியா மிர்சா அடுத்த மாதத்துடன் சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெறுகிறார். அவர் விளையாடும் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி இது தான். சானியா ஜோடி அடுத்து அன்ஹெலினா கலினினா (உக்ரைன்)- அலிசன் வான் உட்வானிக் (பெல்ஜியம்) இணையை எதிர்த்து விளையாட உள்ளது.

ஆண்கள் இரட்டையரில் இந்தியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்தியாவின் யுகி பாம்ப்ரி- சகெத் மைனெனி ஜோடி 6-7 (5-7), 7-6 (7-4), 3-6 என்ற செட் கணக்கில் ஆன்ட்ரியாஸ் மியாஸ் (ஜெர்மனி)- ஜான் பீர்ஸ் இணையிடம் போராடி அடங்கியது.

தமிழக வீரர் ராம்குமார், மெக்சிகோ வீரர் மிக்யூல் ஏஞ்சல் ரியேஸ் வரேலாவுடன் இணைந்து களம் இறங்கினார். இந்த கூட்டணி 6-3, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் கிரீஸ் நாட்டின் பெட்ரோஸ் சிட்சிபாஸ்- ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் சகோதரர்களிடம் வீழ்ந்தது.

மேலும் செய்திகள்