< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி
|21 Jan 2023 7:48 AM IST
ஏற்கனவே முன்னணி வீரர்களான ரபேல் நடால், ஸ்வரேவ், கேஸ்பர் ரூட் ஆகியோர் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.
மெல்போர்ன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார். இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய செபாஸ்டியன் கோர்டா 7-6, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஏற்கனவே முன்னணி வீரர்களான ரபேல் நடால், ஸ்வரேவ், கேஸ்பர் ரூட் ஆகியோர் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.