< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா - சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது...!
|29 Jan 2023 12:27 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பெண்கள் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா - சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
மெல்போர்ன்,
ஆண்டின் முதலாவது 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் பாப்போரா கிரெஜ்சிகோவா - கேடரினா சினியாகோவா இணை ஜப்பானின் ஷூகோ அயோமா - இனா ஷிபஹாரா ஜோடியை எதிர் கொண்டது.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த மோதலில் செக் குடியரசின் பாப்போரா கிரெஜ்சிகோவா - கேடரினா சினியாகோவா இணை ஜப்பானின் ஷூகோ அயோமா - இனா ஷிபஹாரா ஜோடியை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபனின் பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.