< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம்: ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்...!
|25 Jan 2023 6:03 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் ஜோகோவிச் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
மெல்போர்ன்,
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி தொடங்கி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் செர்பிய வீரரான நோவக் ஜோகோவிச், ரஷிய வீரரான ஆண்ட்ரி ரூப்லெவை சந்தித்தார்.
இதில் ஆரம்பம் முதலே நேர்த்தியாக ஆடிய ஜோகோவிச் 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ரூப்லெவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இது ஜோகோவிச்சுக்கு ஆஸ்திரேலிய ஓவனின் 10வது அரையிறுதி ஆகும்.
ஜோகோவிச் வரும் 27ம் தேதி நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரரான டாமி பாலை சந்திக்கிறார்.