< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், ரூப்லெவ் காலிறுதிக்கு முன்னேற்றம்
|24 Jan 2023 12:57 AM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச், ரூப்லெவ் காலிறுதிக்கு முன்னேறினர்.
மெல்போர்ன்,
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. வருகிற 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 4-வது சுற்று போட்டி ஒன்றில் செர்பிய வீரரான நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இந்த போட்டியில் ஜோகோவிச் 6-2, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அலெக்சை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு 4-வது சுற்று போட்டி ஒன்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனேவுடன் மோதினார். இந்த போட்டியில் ரூப்லெவ் 6-3, 3-6, 6-3, 4-6, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் ரூனேவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.