< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிபோட்டிக்கு முன்னேற்றம்
|27 Jan 2023 5:38 PM IST
இ்ன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டாமி பால், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் மோதினர்.
மெல்போர்ன்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இ்ன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டாமி பால், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த போட்டியில் 7-5, 6-1, 6-2 என்ற கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். இதனால் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடக்கும் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் ஆகியோர் மோதுகின்றனர்