< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
|27 Jan 2023 12:54 PM IST
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இ்ன்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் கரன் கச்சனோவ், கிரீஸ் வீரர் சிட்சிபாசுடன் மோதினார்.
இந்த போட்டியில் சிட்சிபாஸ் 7-6 (7-2), 6-4, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் கச்சனோவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் சிட்சிபாஸ் இறுதி போட்டிக்கு முன்னேறினார். தொடர்ந்து நடைபெறும் மற்றொரு அரையிறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச் (செர்பியா)-டாமி பால் (அமெரிக்கா) மோதுகின்றனர்.