< Back
டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா இணை காலிறுதிக்கு முன்னேற்றம்

Image Courtesy: @AITA__Tennis

டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா இணை காலிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
22 Jan 2024 2:49 PM IST

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது. தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹோப் - குரோஷியாவின் நிகோலா மெக்டிக் இணையுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட போபண்ணா இணை 7-6 (10-8), 7-6(7-4) என்ற செட் கணக்கில் வெஸ்லி கூல்ஹோப் - நிகோலா மெக்டிக் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

மேலும் செய்திகள்