< Back
டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; முதல் சுற்றுடன் வெளியேறிய ஆண்டி முர்ரே

Image Courtesy: @AustralianOpen

டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; முதல் சுற்றுடன் வெளியேறிய ஆண்டி முர்ரே

தினத்தந்தி
|
16 Jan 2024 8:21 AM IST

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

மெல்போர்ன்,

டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ள இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து முன்னணி வீரர் ஆண்டி முர்ரே அர்ஜெண்டினா வீரர் தாமஸ் மார்ட்டினுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 6-4, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினா வீரர் தாமஸ் மார்ட்டின் முன்னணி வீரர் ஆண்டி முர்ரேவை வீழ்த்தினார். சுமார் 61 நிமிடங்கள் இந்த ஆட்டம் நீடித்தது.

மேலும் செய்திகள்