< Back
டென்னிஸ்
டென்னிஸ்
2 முறை சாம்பியன் பட்டம் வென்ற நவோமி ஒசாகா ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகல்
|9 Jan 2023 1:44 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா விலகியுள்ளார்.
மெல்பர்ன்,
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 16-ம்தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை நவோமி ஒசாகா பங்கேற்கவிருந்தார். ஆனால் திடீரென போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். விலகலுக்கான காரணத்தையும் அவர் அறிவிக்கவில்லை.
நவோமி விலகல் தொடர்பான அறிவிப்பை ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்குழு அதிகாரப்பூர்வமாக நேற்று தெரிவித்துள்ளது. நவோமி ஒசாகாவுக்குப் பதிலாக டயானா யஸ்த்ரேம்ஸ்கா பிரதானச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார் என்றும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக் குழு தெரிவித்துள்ளது