< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் குப்லர் - ஹிஜிகடா ஜோடி சாம்பியன்..!
|29 Jan 2023 2:28 PM IST
'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது
மெல்போர்ன்,
ஆண்டின் முதலாவது 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.
இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜேசன் குப்லர் - ரின்கி ஹிஜிகடா ஜோடி, மொனாக்கோவின் நீஸ், போலந்தின் ஜேன் ஜோடியை எதிர்கொண்டது .
பரபரப்பான இந்த போட்டியில் 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் குப்லர் - ஹிஜிகடா ஜோடி வென்று, சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.