< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன்: போபண்ணா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
|25 Jan 2024 2:59 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
மெல்போர்ன்,
ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- சீனாவின் சாங் சீசென், செக் நாட்டின் தாமஸ் மெக்காக் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-3, 3-6, 7-6 (10-7) என்ற செட்களில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.