< Back
டென்னிஸ்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர்-இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

Image Courtesy : AFP 

டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர்-இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

தினத்தந்தி
|
26 Nov 2022 2:14 PM IST

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா முன்னேறி உள்ளது

ஸ்பெயின்,

ஸ்பெயினில் நடைபெற்றுவரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா முன்னேறி உள்ளது.

அரையிறுதிப் போட்டியில் குரேஷியா உடன் ஆஸ்திரேலியா மோதியது. இதன் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீரர் தனாஷி, குரேஷிய வீரர் கோரிக்கிடம் தோல்வி அடைந்தார். என்றாலும் அடுத்த ஆட்டத்தில் குரேஷிய வீரர் மரின் சிலிச்சை, ஆஸ்திரேலிய வீரர் டிமினார் வீழ்த்தினார். இரட்டையர் பிரிவிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் வெல்ல, 2க்கு 1 என்ற கேம் கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்