< Back
டென்னிஸ்
ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர்...அரையிறுதிக்கு கரன் கச்சனோவ், சிட்சிபாஸ் முன்னேற்றம்

image tweeted by @AustralianOpen

டென்னிஸ்

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர்...அரையிறுதிக்கு கரன் கச்சனோவ், சிட்சிபாஸ் முன்னேற்றம்

தினத்தந்தி
|
24 Jan 2023 11:56 PM IST

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு சிட்சிபாஸ் மற்றும் கரன் கச்சனோவ் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டி ஒன்றில் கிரீஸ் வீரரான சிட்சிபாஸ், செக் குடியரசு வீரரான ஜிரி லெஹெகாவுடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 6-3, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல் மற்றொரு காலிறுதியில் ரஷியாவின் காரென் கச்சனாவ், அமெரிக்காவின் செபாஸ்டிகோர்டாவுடன் மோதினார். இதில் முதல் 2 செட்களை கச்சனோவ் கைப்பற்றினார். 3வது செட்டில் 3க்கு பூஜ்யம் என்ற புள்ளிகள் கணக்கில் கச்சனோவ் முன்னிலையில் இருந்தபோது, காயமடைந்து ஆட்டத்தின் பாதியிலேயே கோர்டா வெளியேறினார். இதனால் வாக்-ஓவர் அடிப்படையில் அரையிறுதிக்குள் கச்சனோவ் நுழைந்தார்.

மேலும் செய்திகள்