< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் கிர்ஜியோஸ் திடீர் விலகல்
|16 Jan 2023 10:21 PM IST
முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் தொடரில் இருந்து விலகுவதாக கிர்ஜியோஸ் அறிவித்து உள்ளார்.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி வீரர் கிர்ஜியோஸ் காயம் காரணமாக விலகி உள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிக் கிர்ஜியோஸ் நாளை முதல் சுற்று ஆட்டத்தில் ரஷ்ய வீரர் ரோமனுடன் ஆட இருந்தார்.
இந்நிலையில், முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் தொடரில் இருந்து விலகுவதாக கிர்ஜியோஸ் அறிவித்து உள்ளார். கிர்ஜியோஸ் வெளியேறியதால், அமெரிக்க வீரர் டெனிஸ் குட்லா முதல் சுற்று வாய்ப்பைப் பெற்று உள்ளார்.