< Back
டென்னிஸ்
ஆசிய டேபிள் டென்னிஸ்:இந்திய ஆண்கள்  அணி அரையிறுதிக்கு தகுதி..!!
டென்னிஸ்

ஆசிய டேபிள் டென்னிஸ்:இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு தகுதி..!!

தினத்தந்தி
|
5 Sep 2023 4:44 AM GMT

காலிறுதி ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி 3-0 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

யோங்க் சாங்,

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் தென்கொரியாவின் யோங்க் சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் அணிகள் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஒற்றையர் பிரிவில் முதலாவது ஆட்டத்தில் இந்திய வீரர் சரத் கமல் 11-1, 10-12, 11-8, 11-13, 14-12 என்ற செட் கணக்கில் இசாக் குய்க்கை (சிங்கப்பூர்) வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் சத்யன் 11-6, 11-8, 12-10, என்ற நேர்செட்டில் யிவ் என் கோன்பாங்கையும், ஹர்மீத் தேசாய் 11-9, 11-4, 11-6 என்ற நேர்செட்டில் ஹி யு கிளாரென்ஸ் செவ்வையும் தோற்கடித்தனர். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதியில் தோற்கும் அணிக்கு வெண்கலப்பதக்கம் கிடைக்கும். எனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் இந்திய அணி குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

பெண்கள் அணிகள் பிரிவின் காலிறுதியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் ஜப்பானிடம் பணிந்தது. இந்திய வீராங்கனைகள் அஹிதா முகர்ஜி, மணிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி ஆகியோர் தங்களது ஒற்றையர் ஆட்டங்களில் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தனர்.

மேலும் செய்திகள்