< Back
டென்னிஸ்
அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் அல்காரஸ் சாம்பியன்
டென்னிஸ்

அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 'சாம்பியன்'

தினத்தந்தி
|
21 Feb 2023 5:07 AM IST

இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 6-3, 7-5 என்ற நேர்செட்டில் நோரியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பியூனஸ் அயர்ஸ்,

அர்ஜென்டினா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பியூனஸ்அயர்சில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், 13-ம் நிலை வீரர் கேமரூன் நோரியை (இங்கிலாந்து) எதிர்கொண்டார்.

1 மணி 33 நிமிடம் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 6-3, 7-5 என்ற நேர்செட்டில் நோரியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவர் வென்ற 7-வது ஏ.டி.பி. பட்டம் இதுவாகும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க ஓபனில் மகுடம் சூடிய அல்காரஸ், அதன் பிறகு காயம் பிரச்சினை காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக எந்தவித போட்டியிலும் பங்கேற்காததுடன் தரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தை இழந்தார்.

19 வயதான அவர் அமெரிக்க ஓபனுக்கு பிறகு வென்ற முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்