< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ்; நிக்கோலஸ் ஜாரியை வீழ்த்தி டயஸ் அகோஸ்டா சாம்பியன்
|19 Feb 2024 5:32 PM IST
இவர் இந்த தொடரில் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் ஒரு செட்டை கூட இழக்கவில்லை என்பது சிறப்பானதாகும்.
பியூனஸ் அயர்ஸ்,
அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் தொடர் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்றது. களிமண் ஆடுகளத்தில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு டயஸ் அகோஸ்டா ( அர்ஜென்டினா) மற்றும் நிக்கோலஸ் ஜாரி (சிலி) ஆகியோர் முன்னேறினர்.
இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் டயஸ் அகோஸ்டா 6-3 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் நிக்கோலஸ் ஜாரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
மேலும் இவர் இந்த தொடரில் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் ஒரு செட்டை கூட இழக்கவில்லை என்பது சிறப்பானதாகும்.