< Back
டென்னிஸ்
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்..!

Image Courtesy : AFP 

டென்னிஸ்

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்..!

தினத்தந்தி
|
8 Jan 2023 7:18 PM IST

பரபரப்பான இந்த ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் செட்டை 7-6 (8-10) என்ற கணக்கில் ஜோகோவிச் இழந்தார்

அடிலெய்டு ,

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்தது. இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா, 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், தற்போது தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான செர்பியா வீரர் ஜோகோவிச் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் செட்டை 7-6 (8-10) என்ற கணக்கில் ஜோகோவிச் இழந்தார். பின்னர் இரண்டாவது செட்டை 7-6 (7-3) என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார்.

இதையடுத்து,வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி செட் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

மேலும் செய்திகள்